உத்தமபாளையம் ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி தலைவர்கள் ஆர்ப்பாட்டம்


உத்தமபாளையம் ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி தலைவர்கள் ஆர்ப்பாட்டம்
x

உத்தமபாளையம் ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி தலைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி

தேனி மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு தலைவரும், ராயப்பன்பட்டி ஊராட்சி தலைவருமான பால்ராஜ் தலைமையில் ஊராட்சி தலைவர்கள் 13 பேர், உத்தமபாளையம் ஒன்றிய அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். அப்போது அவர்கள் அங்கு திடீரென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், ஊராட்சிகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பாக தலைவருக்கு தெரியாமல் டெண்டர் விடப்படுவதாக கூறப்படுகிறது. இது பஞ்சாயத்து ராஜ் சட்டத்தில் ஊராட்சி தலைவர்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை பறிக்கும் செயலாகும். எனவே இதுகுறித்து முதல்-அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊராட்சி தலைவர்கள் வலிறுத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊராட்சி தலைவர்கள் தீபா (நாகையகவுண்டன்பட்டி), மீனா மும்மூர்த்தி (ஆனைமலையன்பட்டி), கருப்பையா (கோகிலாபுரம்), பவுன்ராஜ் (ராமசாமிநாயக்கன்பட்டி), கவிதா நாகராஜ் (உ.அம்மாபட்டி), ராஜன் (மேலச்சிந்தலைச்சேரி), செல்லப்பா (லட்சுமிநாயக்கன்பட்டி), அன்னலட்சுமி (தம்மிநாயக்கன்பட்டி), வசந்தி சிவசூரியன் (தே.ரெங்கநாதபுரம்), உமாமகேஸ்வரி (பல்லவராயன்பட்டி), மல்லிகா (தே.மீனாட்சிபுரம்) ஆகியோர் கலந்துகொண்டனர்.


Related Tags :
Next Story