திண்டுக்கல், பழனியில் தட்டு ஏந்தி சத்துணவு ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்


திண்டுக்கல், பழனியில் தட்டு ஏந்தி சத்துணவு ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
x

திண்டுக்கல், பழனியில் கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஓய்வூதியர்கள் தட்டு ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில், கோரிக்கையை வலியுறுத்தி காலி தட்டு ஏந்தி இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட செயலாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படியுடன் சட்டபூர்வ ஓய்வூதிய தொகையாக ரூ.7 ஆயிரத்து 850 வழங்க வேண்டும். சமூக பாதுகாப்பு திட்ட சிறப்பு பென்சன் என்ற அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

இதேபோல் பழனி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் வேலுசாமி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் சாலாட்சி, இணை செயலாளர் விமலாகாந்தா, ஒன்றிய தலைவர்கள் ஜீவரத்தினம் (பழனி), தமிழ்ச்செல்வி (தொப்பம்பட்டி) ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில செயலாளர் ராஜசேகரன், ஓய்வுபெற்ற பள்ளி-கல்லூரி ஆசிரியர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் பிரபாகரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் பழனி, தொப்பம்பட்டி, ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்த சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

நிலக்கோட்டையில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் ஒன்றிய தலைவர் தலைவர் அலெக்ஸ் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் நாராயணசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் செயலாளர் தமிழ்ச்செல்வி, சத்துணவு ஊழியர் சங்க வட்டார செயலாளர் ஆனஸ்ட்ராஜ், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ராமு, சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் ஊழியர் சங்க மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


Related Tags :
Next Story