தர்மபுரி உள்பட பல்வேறு இடங்களில் சத்துணவு ஓய்வூதியர்கள் தட்டு ஏந்தி ஆர்ப்பாட்டம்


தர்மபுரி உள்பட பல்வேறு இடங்களில் சத்துணவு ஓய்வூதியர்கள் தட்டு ஏந்தி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 Oct 2022 12:15 AM IST (Updated: 15 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி உள்பட பல்வேறு இடங்களில் சத்துணவு ஓய்வூதியர்கள் தட்டு ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தேர்தல் நேரத்தில் தி.மு.க. கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். அகவிலைப்படியுடன் சட்டபூர்வ பென்ஷன் ரூ.7,850 வழங்க வேண்டும். சட்ட பாதுகாப்பு திட்ட சிறப்பு பென்ஷன் என்ற அரசாணையை மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தர்மபுரி மற்றும் பென்னாகரம் ஒன்றிய சங்கத்தின் சார்பில் தர்மபுரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தட்டு ஏந்தி நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தர்மபுரி ஒன்றிய தலைவர் பெருமாள், பென்னாகரம் ஒன்றிய செயலாளர் பழனிசாமி ஆகியோர் தலைமை தாங்கினர்.

கோஷங்கள்

தர்மபுரி ஒன்றிய செயலாளர் கோவிந்தன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சேகர், மாவட்ட செயலாளர் பெருமாள் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் முனிராஜ், ரீனா, காவேரி, சுப்பிரமணியன் வில்லிய புஷ்பம், குப்புசாமி உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். முடிவில் ஒன்றிய பொருளாளர் கணேசன் நன்றி கூறினார்.

மொரப்பூர்

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் மொரப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மொரப்பூர் ஒன்றிய தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். சங்க நிர்வாகிகள் மணி, கஸ்தூரி, பட்டு, சிவலிங்கம், வரதராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடத்தூர் ஒன்றிய தலைவர் கண்ணையன் வரவேற்றார். மாவட்ட துணைத் தலைவர் இளசியப்பன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

சத்துணவு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநில துணைத் தலைவர் துரை, மாநில துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பேசினர். இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி காலி தட்டுகளை கைகளில் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பினர்.


Next Story