தர்மபுரியில் இந்தி திணிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம்
தர்மபுரி
தர்மபுரி:
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் ஆகியவற்றின் சார்பில் கட்டாய இந்தி திணிப்பை கண்டித்து தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் அருள்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சபரிராஜன், மாவட்ட பொருளாளர் சிலம்பரசன், நகர தலைவர் மணிகண்டன், நிர்வாகிகள் செந்தில்குமார், குப்பன், முன்னாள் மாவட்ட தலைவர் மாரிமுத்து உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு கட்டாயப்படுத்தி இந்தி மொழியை தமிழக மக்களிடம் திணிக்க கூடாது என்று இந்த ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாணவர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.
Next Story