தமிழக அரசை கண்டித்து தர்மபுரியில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்


தமிழக அரசை கண்டித்து தர்மபுரியில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 Oct 2022 12:15 AM IST (Updated: 28 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தமிழக அரசு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று கூறி தர்மபுரி மாவட்ட பா.ஜ.க. சார்பில் தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஐஸ்வர்யம் முருகன், வெங்கட்ராஜ், பிரவீன், மாவட்ட துணைத் தலைவர்கள் சோபன், முரளி, சிவன், கிருத்திகா, ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான கே.பி.ராமலிங்கம் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு தமிழக அரசு எந்தவித திட்டங்களையும் நிறைவேற்றவில்லை என்று பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் தெய்வமணி, சரிதா, கிருஷ்ணவேணி, மாவட்ட கல்வியாளர் பிரிவு தலைவர் இமானுவேல், ஊடகப்பிரிவு தலைவர் மதியழகன், பிற்பட்டோர் பிரிவு தலைவர் காவேரி வர்மன், இளைஞர் அணி தலைவர் மவுனகுரு, பட்டியல் அணி தலைவர் களிர்கண்ணன், மகளிர் அணி தலைவி சங்கீதா மற்றும் ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் நகர தலைவர் சக்திவேல் நன்றி கூறினார்.


Next Story