தபால் அலுவலகங்கள் முன்பு இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


தபால் அலுவலகங்கள் முன்பு இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

திண்டுக்கல், வேடசந்தூரில் உள்ள தபால் அலுவலகங்கள் முன்பு இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல், வேடசந்தூரில் உள்ள தபால் அலுவலகங்கள் முன்பு இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

இந்து மக்கள் கட்சி சார்பில் திண்டுக்கல் தலைமை தபால் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாநில இளைஞரணி துணைத்தலைவர் மோகன் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பாளர் ரமேஷ் முன்னிலை வகித்தார். மாநில துணை பொதுச்செயலாளர் தர்மர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதனுடன் தொடர்புடைய பிற அமைப்புகளுக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும். இந்து அமைப்பு நிர்வாகிகளின் கார் எரிப்பு சம்பவம், கோவை கார் வெடிப்பு சம்பவம் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டவர்களை கைது செய்வதோடு நிறுத்திவிடாமல் அவர்களை தூக்கில் போட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

அதையடுத்து மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆகியோருக்கு இந்து மக்கள் கட்சி சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது.

வேடசந்தூர்

இதேபோல் வேடசந்தூர் தபால் நிலையம் முன்பு இந்து மக்கள் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் நா.ராமச்சந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் நாகராஜ் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக மாநில துணை பொதுச் செயலாளர் தர்மர் கலந்துகொண்டு பேசினார். மாநில இளைஞரணி செயலாளர் மோகன், மாநில செயலாளர் மணிகண்டன், மாவட்ட செயலாளர் மருதமுத்து மற்றும் நிர்வாகிகள் திருப்பதி, முத்து உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


Related Tags :
Next Story