அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் நடந்தது.
நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே கிள்ளுக்குடியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்பதை வலியுறுத்தி பொதுமக்கள் நேற்று கீழ்வேளூர் - கச்சனம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதை அறிந்த தாசில்தார் ரமேஷ்குமார் மற்றும் போலீசார் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் போராட்டத்தை கைவிடாத பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. .இதை தொடர்ந்து தாசில்தார் மற்றும் பொதுப்பணித்துறை (கட்டிடம்) உதவி செயற் பொறியாளர் மோகன்ராஜ், நாகை மாவட்ட கல்வி அலுவலர் செல்வராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் தியாகராஜன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்தனர். அப்போது பள்ளியில் சுத்தமான குடிநீர் வசதி, கழிவறை வசதி செய்து தரப்படும் என்றும், புதிய பள்ளி கட்டிடம் கட்டும் வரை, தற்காலிக வகுப்பறை (ஷெட்) அமைத்து தரப்படும் என்றும் உறுதி அளித்தனர். அதன்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.