திண்டுக்கல்லில் சுகாதார ஆய்வாளர்கள் ஆர்ப்பாட்டம்


திண்டுக்கல்லில் சுகாதார ஆய்வாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

திண்டுக்கல்லில் சுகாதார ஆய்வாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் சார்பில், திண்டுக்கல்லில் உள்ள சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதற்கு சுகாதார ஆய்வாளர்கள் சங்க மண்டல செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் நாகராஜன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் நல்லேந்திரன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் மாநில தலைவர் ஜெயக்குமார், சட்டக்குழு தலைவர் சந்திரமோகன், செயற்குழு உறுப்பினர் அன்பரசு, மாவட்ட இணைச்செயலாளர் கோபாலகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர் அகமது ரிபாய் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது, துப்புரவு ஆய்வாளர் பயிற்சி முடித்தவர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதோடு, கொரோனா பேரிடர் மற்றும் மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் பணியாற்றுபவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முடிவில் சங்க மாவட்ட துணைத்தலைவர் தங்கவேல் நன்றி கூறினார்.


Related Tags :
Next Story