ஆவின் பால் விலையை குறைக்க வலியுறுத்தி ஜனநாயக மாதர் சங்கத்தினர் கடிதம் அனுப்பும் போராட்டம்-தர்மபுரி தபால் நிலையத்தில் நடந்தது


ஆவின் பால் விலையை குறைக்க வலியுறுத்தி ஜனநாயக மாதர் சங்கத்தினர் கடிதம் அனுப்பும் போராட்டம்-தர்மபுரி தபால் நிலையத்தில் நடந்தது
x
தினத்தந்தி 16 Nov 2022 12:15 AM IST (Updated: 16 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

பால் விலையை குறைக்க வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் தமிழக முதல்-அமைச்சருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் தர்மபுரி தபால் நிலையத்தில் நடைபெற்றது.

கடிதம் அனுப்பும் போராட்டம்

ஆவின் பால் பொதுமக்களுக்கு பச்சை, நீலம், ஆரஞ்சு நிற பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தநிலையில் பிரீமியம் வகையான கொழுப்பு நிறைந்த ஆரஞ்சு நிற பாக்கெட் பாலின் விலை லிட்டருக்கு ரூ.12 உயர்த்தப்பட்டுள்ளது. முன்பு ரூ.48-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு லிட்டர் ஆரஞ்சு நிற பாக்கெட் பாலின் விலை இப்போது ரூ.60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் பால் விலை உயர்வை கண்டித்தும், இந்த விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் தர்மபுரி தலைமை தபால் நிலையம் முன்பு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கடிதம் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு சங்க மாவட்ட செயலாளர் மல்லிகா தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஜெயா, தர்மபுரி நகர செயலாளர்‌ நிர்மலா ராணி, ஒன்றிய தலைவர் தமிழ்மணி, ஒன்றிய செயலாளர் மீனாட்சி, நிர்வாகிகள் ரங்கநாயகி, மாது உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

திரும்ப பெற வேண்டும்

ஆவின் பால் விலை ஒரு லிட்டருக்கு ரூ.12 உயர்த்தப்பட்டிருப்பது ஏழை, எளிய மக்களை கடுமையாக பாதித்துள்ளது. இதனால் ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்தவர்கள் பாலை வாங்கி பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. இதை கருத்தில் கொண்டு பால் விலை உயர்வை அரசு திரும்ப பெறவேண்டும்.

பால் பொருட்களின் விலையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் இந்த போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இந்த கோரிக்கையை வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இதில் ஜனநாயக மாதர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.


Next Story