நெசவாளர் தொழிற்சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டம்


நெசவாளர் தொழிற்சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 16 Nov 2022 1:15 AM IST (Updated: 16 Nov 2022 1:20 AM IST)
t-max-icont-min-icon

திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்கத்தில் நெசவாளர் தொழிற்சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்

திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்கத்தில் நெசவாளர் தொழிற்சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உள்ளிருப்பு போராட்டம்

கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தில் 1850 நெசவாளர்களை உறுப்பினர்களாக கொண்ட திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்கம் இயங்கி வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் ரூ.57 கோடிக்கு பட்டுப்புடவைகள் உற்பத்தி செய்து விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.

இந்த நிலையில் அங்கத்தினர் வரவு, செலவு பதிவு செய்யும் பணிகளை கீழ்த்தளத்தில் செய்ய வேண்டும். ஜரிகை கொள்முதல் 60 சதவீதம், 40 சதவீம் என்கிற நடைமுறையை தொடர வேண்டும்.

ஜரிகையின் உள்ளடக்கத்தில் தற்போதுள்ள நிலைமையையே தொடர ேவண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெசவாளர்கள் தொழிற்சங்கங்கள் சார்பில் சங்கத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடந்தது. இதில் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தை

இதையடுத்து திருவிடைமருதூர் தாசில்தார் சுசீலா, போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் ஆகியோர் முன்னிலையில் கோரிக்கைகள் தொடர்பாக நெசவாளர் கூட்டமைப்பு பிரதிநிதிகள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள், சங்க நிர்வாக இயக்குனர்கள், சங்க மேலாண்மை இயக்குனர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்ட பேச்சு வார்த்தை கூட்டம் நடந்தது.

இதில் ஜரிகையின் உள்ளடக்கம் மற்றும் விகிதாச்சாரம் தொடர்பாக சங்க அளவில் முடிவெடுக்க இயலாது என்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளின் கோரிக்கைகள் தொடர்பாக அரசிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டது.

மேலும் சங்க அங்கத்தினர்கள் வரவு, செலவு தொடர்பான பணிகளை தரை தளத்தில் செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிற 30-ந் தேதிக்குள் முடிவு தெரிவிக்கப்படும் என கூறப்பட்டது. அதன்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.


Next Story