தர்மபுரியில் வன்னிய குல சத்திரியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


தர்மபுரியில் வன்னிய குல சத்திரியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 Nov 2022 12:15 AM IST (Updated: 17 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரியில் வன்னிய குல சத்திரியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி மாவட்ட வன்னிய குல சத்திரியர்கள் சமூக சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். மாவட்ட பொது சொத்து பாதுகாப்பு குழு தலைவர் திருமுருகன் வரவேற்றார். தர்மபுரி மாவட்ட தலைவர் லோகநாதன், மாவட்ட செயலாளர் முனியப்பன், நிர்வாகிகள் தேவகுமார் வர்மா, வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பு குழு தலைவர் டாக்டர் தமிழரசன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். வன்னிய குல சத்திரியர்களுக்கு சொந்தமான 400-க்கும் மேற்பட்ட சொத்துகளை மீட்க உதவ வேண்டும். சட்டவிரோத வன்னியர் கல்வி அறக்கட்டளை பெயர் மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும். வன்னியர் சமூகத்திற்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க சட்ட திருத்தம் செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.


Next Story