கடத்தூரில் ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளாட்சி பணியாளர் சம்மேளனம் ஆர்ப்பாட்டம்


கடத்தூரில் ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளாட்சி பணியாளர் சம்மேளனம் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 Nov 2022 12:15 AM IST (Updated: 19 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
திண்டுக்கல்

மொரப்பூர்:

தர்மபுரி மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளாட்சி பணியாளர் சம்மேளனம், பொது பணியாளர் சங்கம், டேங்க் ஆபரேட்டர்கள், தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர் சம்மேளனம் ஆகியவை சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடத்தூர் ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடந்தது. ஆர்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் சிவராமன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் புகழேந்தி முன்னிலை வகித்தார்.

மாவட்ட தலைவர் மனோகரன், மாவட்ட செயலாளர் புகழேந்தி ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினர். ஆர்ப்பாட்டத்தில் பேரூராட்சிகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு குறைதீர் ஆணையம் அமைக்க வேண்டும். உள்ளாட்சிகளில் வேலைபார்ப்போருக்கு ஒவ்வொரு மாதமும் 5-ந் தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


Next Story