அடிப்படை தேவைகளை நிறைவேற்றக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


அடிப்படை தேவைகளை நிறைவேற்றக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 Nov 2022 12:15 AM IST (Updated: 19 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

பென்னாகரம்:

அடிப்படை தேவைகளை நிறைவேற்றக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சார்பில் பென்னாகரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டம்

பென்னாகரம் ஒன்றியம் மஞ்சநாயக்கனஅள்ளி மற்றும் கலப்பம்பாடி ஆகிய ஊராட்சிகளில் குடிநீர், தெரு விளக்கு, கழிவு நீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வேண்டும். கால்நடை மருத்துவமனையை முழு நேர மருத்துவமனையாக மாற்ற வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும்.

அனைத்து குடியிருப்புகளுக்கும் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்க வேண்டும். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

கோஷங்கள்

ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் சக்கரவேல் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சிசுபாலன், சின்னசாமி, ரவி, ஒன்றிய செயலாளர் ஜி.சக்திவேல், மாவட்ட குழு உறுப்பினர்கள் ஜீவானந்தம், குமார், ராஜி, அன்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் குமார், மூத்த தலைவர் இளம்பருதி ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினர்.

இதில் மஞ்சநாயக்கனஅள்ளி மற்றும் கலப்பம்பாடி ஊராட்சிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அடிப்படை தேவைகளை நிறைவேற்றக்கோரியும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர். முடிவில் கட்சி இடைக்குழு உறுப்பினர் வாஞ்சிநாதன் நன்றி கூறினார்.


Next Story