பாப்பிரெட்டிப்பட்டியில் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்


பாப்பிரெட்டிப்பட்டியில் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Jan 2023 12:15 AM IST (Updated: 11 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை கல்லூரி மாணவ-மாணவிகள் நேற்று கல்லூரி நுழைவு வாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தமிழக சட்டசபையில் இருந்து கவர்னர் ஆர்.என்.ரவி வெளியேறியதை கண்டித்தும், உரையில் சில வார்த்தைகளை படிக்காமல் தவிர்த்ததை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். மேலும் தமிழ்நாடு அடி பணியாது, கவர்னர் உடனடியாக தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story