நல்லம்பள்ளியில் விவசாயிகள் சங்கத்தினர் மறியல்


நல்லம்பள்ளியில் விவசாயிகள் சங்கத்தினர் மறியல்
x
தினத்தந்தி 24 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-25T00:16:56+05:30)
தர்மபுரி

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளியில் உள்ள பொதுவுடைமை வங்கி முன்பு ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கம் மற்றும் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் ஆகியவை சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடந்தது. இதற்கு தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பிரதாபன் தலைமை தாங்கி, கோரிக்கைகள் குறித்து பேசினார். மத்திய அரசு தொழிலாளர் விரோத சட்டங்களை கைவிட வேண்டும். மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பணியை 200 நாட்களாக அதிகரிக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு தினமும் ரூ.700 ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில் நிர்வாகிகள் ராஜகோபால், முருகேசன், பச்சாகவுண்டர், கிருஷ்ணன், அலமேலு, காளியம்மாள், ராஜமாணிக்கம், கோவிந்தன், பழனியப்பன், சம்பத் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து கோஷக்களை எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட 17 பெண்கள் உள்பட 27 பேரை அதியமான்கோட்டை போலீசார் கைது செய்து, தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.


Next Story