தர்மபுரியில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


தர்மபுரியில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-26T00:15:22+05:30)
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி மாவட்ட அனைத்து வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரியில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். பாரத ஸ்டேட் வங்கி ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் சந்தோஷ், அதிகாரிகள் சங்க மாவட்ட தலைவர் வீரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். புதிய ஊதிய குழுவை ஏற்படுத்த வேண்டும். பழைய ஊதிய குழு பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும். வங்கிகளை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்களின் ஓய்வூதியத்தை அதிகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் வங்கி பணியாளர்கள் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கவுதம், முனிராஜ், பூஜிதா, செம்முனியன், பிரபாகரன், ரத்தினவேல், சக்திவேல் மற்றும் பல்வேறு வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 30, 31-ந் தேதி நடைபெறவுள்ள வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தை முழுமையாக வெற்றி பெற செய்ய அனைத்து வங்கி ஊழியர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது.


Next Story