சூளகிரியில்தமிழ் தேசிய பேரியக்கத்தினர் ஆர்ப்பாட்டம்


சூளகிரியில்தமிழ் தேசிய பேரியக்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 3 Feb 2023 12:15 AM IST (Updated: 3 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

சூளகிரி:

சூளகிரியில் உள்ள ரவுண்டானா பகுதியில் நேற்று தமிழ் தேசிய பேரியக்கம் சார்பில் வட மாநிலத்தவர்களை வெளியேற்றக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலைமை செயற்குழு உறுப்பினர் மாரிமுத்து தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் திருப்பூர் மற்றும் சூளகிரி அருகே சின்னார் பகுதியில் தமிழக மக்களை வட மாநிலத்தவர்கள் தாக்கியதை கண்டித்தும், வட மாநிலத்தவரை வெளியேற்ற கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் தமிழ் தேசிய பேரியக்க நிர்வாகிகள் ராசுகுமார், சோக்கிம், லட்சுமணன், சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story