விவசாயிகள் சாலை மறியல்


விவசாயிகள் சாலை மறியல்
x
தினத்தந்தி 7 Feb 2023 12:15 AM IST (Updated: 7 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

அரூர்:

அரூர் ஒழுங்குமுறை விற்பனை கூட்டத்தில் நேற்று பருத்தி ஏலத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த ஏலத்துக்கு விவசாயிகள் பருத்தியை கொண்டு வந்தனர். இந்தநிலையில் ஏலத்துக்கு வியாபாரிகள் வருவதை சிலர் தடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பருத்தியை ஏலம் எடுக்க வியாபாரிகள் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் நேற்று மாலை அரூர்-சேலம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று, பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் இன்று (செவ்வாய்க்கிழமை) ஏலம் நடத்தப்படும் என்றும், அதில் வியாபாரிகள் கலந்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து விவசாயிகள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story