தர்மபுரியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி:
பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்தும், அதானி குழுமத்திற்கு ஆதரவாக செயல்படுவதாக கூறியும் தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் தர்மபுரி தொலைபேசி நிலையம் அருகில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் எம்.பி.யுமான தீர்த்தராமன் தலைமை தாங்கினார். நகர தலைவர் வேடியப்பன் வரவேற்றார். மாநில பொது குழு உறுப்பினர்கள் நரேந்திரன், சண்முகம், கிருஷ்ணன், மோகன்குமார், ஜெயசங்கர், மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவர் காளியம்மள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் வட்டார தலைவர்கள் வேலன், மணி ஞானசேகர், வக்கீல் சந்திரசேகர், வஜ்ஜிரம், பெரியசாமி, சிலம்பரசன், ராஜேந்திரன், வெங்கடாசலம், சிறுபான்மை அணி தலைவர் முபாரக், எஸ்.சி.-எஸ்.டி. அணி மாநில துணைத் தலைவர் முருகேசன், ஐ.என்.டி.யு.சி. பொது செயலாளர் ராமசுந்தரம், நிர்வாகிகள் தங்கவேல், சென்னகேசவன், முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் வடிவேல் நன்றி கூறினார்.