தர்மபுரியில் அங்கன்வாடி மைய ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி:
தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி மைய ஓய்வூதியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றிய தலைவர் பெருமாள் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பழனிச்சாமி, மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், நிர்வாகிகள் கோவிந்தன், கணேசன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட நிர்வாகி புகழேந்தி உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.
சத்துணவு மற்றும் அங்கன்வாடி மைய ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக அகவிலைப்படியுடன் ரூ.6 ஆயிரத்து 750 வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசின் அனைத்து துறைகளிலும் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். பணியிடங்களில் 50 சதவீத ஒதுக்கீடு செய்து தகுதியுள்ள சத்துணவு, அங்கன்வாடி மைய ஊழியர்களுக்கு பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும். அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்படும் காலை சிற்றுண்டி திட்டத்தை தனியாரிடம் ஒப்படைப்பதை கைவிட்டு,, சத்துணவு திட்டத்தில் இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.