போலீஸ் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் காத்திருப்பு போராட்டம்
போலீஸ் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் காத்திருப்பு போராட்டம் நடந்தது.
தஞ்சை மாவட்டம், அம்மாப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் 15 வயது சிறுமியை கடத்திச் சென்ற நபருக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி, அவரை கண்டித்தும், அவர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் அம்மாப்பேட்டை போலீஸ் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தில் ்ஈடுபட்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி போலீஸ் நிலையத்துக்கு சென்ற கட்சி நிர்வாகிகளை தரக் குறைவாக பேசி தாக்க முயற்சித்ததை கண்டித்து நிர்வாகிகள் கோஷம் எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி, இன்ஸ்பெக்டர் கலைவாணி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது தொடர்புடைய சப்-இன்ஸ்பெக்டர் மீது துறைவாரியான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதி அளித்தனர். அதன்பேரில் காத்திருப்பு போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டம் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.