வட்டார வளர்ச்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


வட்டார வளர்ச்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 22 Feb 2023 12:15 AM IST (Updated: 22 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

காரிமங்கலம்:

காரிமங்கலம் ஒன்றியம் ஜிட்டாண்டஅள்ளி ஊராட்சியில் சின்ன ஏரி, பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரிகளில் மீன் பிடிப்பதற்கான குத்தகையை ஜிட்டாண்டஅள்ளி ஊராட்சி பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் சின்ன ஏரியில் மீன் பிடிப்பதற்கான குத்தகையை வேறு நபருக்கு வழங்கியதாக தெரிகிறது. இதனிடையே பெரிய ஏரியில் மீன் பிடிப்பதற்கான குத்தகைக்கு ஏலம் நடத்த மகேந்திரமங்கலம் ஊராட்சி நிர்வாகம் மூலம் அனுமதி வழங்கப்பட்டது. இதை அறிந்த ஜிட்டாண்டஅள்ளி பொதுமக்கள் காரிமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் ஏலத்தை ரத்து செய்வதாக கூறினார். இதையடுத்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story