தர்மபுரியில் வணிகவரித்துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


தர்மபுரியில் வணிகவரித்துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Feb 2023 6:45 PM GMT (Updated: 23 Feb 2023 6:45 PM GMT)
தர்மபுரி

தர்மபுரி:

வணிகவரித்துறை பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி வணிகவரித்துறை அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வணிகவரித்துறை பணியாளர் சங்க மாவட்ட தலைவர் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் திருப்பதி மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் பழனியம்மாள், மாவட்ட செயலாளர் சேகர், வட்ட செயலாளர் குமரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.மாநில துணை வரி அலுவலர் பதவி உயர்வு தொடர்பான கோப்பினை தனியாக பராமரித்து விரைவாக பதவி உயர்வு வழங்க வேண்டும். உரிய கால அவகாசம் வழங்காமல் அறிக்கைகள் கேட்பதை உயர் அதிகாரிகள் தவிர்க்க வேண்டும். பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் ஆய்வு கூட்டங்களை தவிர்த்து, களப்பணியை மேற்கொள்ள கள அலுவலர்களுக்கு உரிய அவகாசம் வழங்க வேண்டும். இரவு காவலர், அலுவலக உதவியாளர், பதிவு எழுத்தர், டிரைவர் ஆகிய காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.


Next Story