வேடசந்தூரில் சீமானை கண்டித்து ஆதித்தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


வேடசந்தூரில் சீமானை கண்டித்து ஆதித்தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 Feb 2023 2:00 AM IST (Updated: 27 Feb 2023 2:00 AM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூரில் சீமானை கண்டித்து ஆதித்தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது எடுத்தபடம்.

திண்டுக்கல்

ஆதித்தமிழர் கட்சி சார்பில் வேடசந்தூர் ஆத்துமேட்டில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் ஈஸ்வரவேந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பு செயலாளர் ரமேஷ் முன்னிலை வகித்தார். மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் யோகராஜ் வரவேற்றார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது ஒரு குறிப்பிட்ட சமுதாயம் குறித்து அவதூறாக பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட நிதி செயலாளர் சரவணன், வேடசந்தூர் ஒன்றிய பொறுப்பாளர்கள் விஜயகுமார், பெருமாள், ஒட்டன்சத்திரம் ஒன்றிய செயலாளர் மாணிக்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


Next Story