திண்டுக்கல்லில் ஆதித்தமிழர் விடுதலை கட்சியினர் ஆர்ப்பாட்டம்


திண்டுக்கல்லில் ஆதித்தமிழர் விடுதலை கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 Feb 2023 2:00 AM IST (Updated: 28 Feb 2023 2:00 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் ஆதித்தமிழர் விடுதலை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

ஆதித்தமிழர் விடுதலை கட்சி சார்பில், திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட அமைப்பாளர் விடுதலைவீரன் தலைமை தாங்கினார். இதில் தந்தை பெரியார் திராவிட கழக மாநில பிரசார துணைசெயலாளர் துரைசம்பத், சமநீதி புலிகள் கட்சி நிறுவனர் வெள்ளைப்பாண்டியன் ஆகியோர் பங்கேற்று பேசினர்.

ஆர்ப்பாட்டத்தின்போது, திண்டுக்கல் கோட்டைக்குளம் அருகேயுள்ள முளைப்பாரி கரைக்கும் தொட்டியில் விழுந்து பலியான வெற்றிவேல் இறப்பிற்கு நீதி வழங்க வேண்டும். துப்புரவு பணியாளர்களை அவதூறாக பேசிய சீமானை கண்டித்தும், மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் மீதான விரோத போக்கை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் துப்புரவு பணியாளர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.


Related Tags :
Next Story