நுகர் பொருள் வாணிபக்கழக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருவாரூரில்நுகர் பொருள் வாணிபக்கழக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்
திருவாரூர்;
தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக்கழக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் அனைத்து கொள்முதல் நிலையங்கள், சேமிப்பு கிடங்குகள், சேமிப்பு நிலையங்கள் நவீன அாிசி ஆலைகள் முன்பு என தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. திருவாரூரில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஏ.ஐ.டி.யூ..சி. தொழிற்சங்க இணைப்பொதுசெயலாளர் குணசேகரன் தலைமை தாங்கினார். . நுகர்பொருள் வாணிபக்கழகத்தை தனியார் மயமாக்க கூடாது. கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள மூட்டைகளை உடனே இயக்கம் செய்யவேண்டும். விவசாயிகளிடம் இருந்து உடனே நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். ஓய்வுபெற்ற பணியாளருக்கு நிர்வாகம் பரிந்துரை செய்த மாத கருணை தொகை ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
Related Tags :
Next Story