சீமானை கண்டித்து ஆதித்தமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டம்


சீமானை கண்டித்து ஆதித்தமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 March 2023 2:45 AM IST (Updated: 13 March 2023 2:45 AM IST)
t-max-icont-min-icon

நிலக்கோட்டையில் சீமானை கண்டித்து ஆதித்தமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

ஆதித்தமிழர் பேரவையினர் சார்பில் நிலக்கோட்டையில் உள்ள மினி பஸ் நிலையம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அருந்ததியர் சமுதாயம் குறித்து இழிவாக பேசியதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்தும், அவரை கைது செய்யக்கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு நிலக்கோட்டை ஒன்றிய செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார். திண்டுக்கல் மாவட்ட செயலாளர் வினோத், மாநில கொள்கை பரப்பு செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். இதில், ஒன்றிய தலைவர் முரளி மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு, சீமானை கைது செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.


Related Tags :
Next Story