மின்வாரியத்தில்காலிப்பணியிடங்களை நிரப்ப கோரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
மின்வாரிய தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு. மாநில துணைத்தலைவர் ஜீவா தலைமை தாங்கினார். லெனின் மகேந்திரன் உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். முத்தரப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் பதவிகளை அனுமதிக்க வேண்டும். மின்வாரியத்தில் 56 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். நிரந்தர தன்மை வாய்ந்த பதவிகளை அவுட்சோர்சிங் முறைக்கு மாற்றக்கூடாது. பணியாளர்கள் ஏற்று கொள்ளுகின்ற வகையில் அரசு உத்தரவாதத்துடன் கூடிய முத்தரப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும்.
1.12.2019 முதல் மின்வாரிய பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய பண பயன்களை வழங்க வேண்டும். மின்வாரிய பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மின்வாரிய தொழிலாளர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.