தாதம்பட்டியில்பால் உற்பத்தியாளர்கள் மாடுகளுடன் போராட்டம்


தாதம்பட்டியில்பால் உற்பத்தியாளர்கள் மாடுகளுடன் போராட்டம்
x
தினத்தந்தி 18 March 2023 12:30 AM IST (Updated: 18 March 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

மத்தூர்:

போச்சம்பள்ளி அருகே தாதம்பட்டி கிராமத்தில் உள்ள கூட்டுறவு பால் குளிர்விப்பு மையத்தின் எதிரே நேற்று பால் உற்பத்தியாளர்கள் தங்களது மாடுகளுடன் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தினர். தனியார் பால் நிறுவனத்துக்கு இணையாக பால் விலையை உயர்த்தக்கோரியும், தீவன மூட்டைக்கு தமிழக அரசு மானியம் வழங்க கோரியும், 7 வாரங்களாக நிலுவையில் உள்ள தொகையை வழங்க கோரியும் கோஷங்கள் எழுப்பி போராடினர். எனினும் இந்த போராட்டத்திற்கு அரசு செவி சாய்க்கவில்லை என்றால் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் பால் நிறுத்த போராட்டத்தை செயல்படுத்த உள்ளோம் என தெரிவித்தார். இதில் 100-க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story