வேடசந்தூரில் காங்சிரசார் ஆர்ப்பாட்டம்
வேடசந்தூரில் காங்சிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் சார்பில் நேற்று வேடசந்தூர் ஆத்துமேட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவரது எம்.பி. பதவியை பறிக்கப்பட்டதை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு திண்டுக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் பிரசன்னா தலைமை தாங்கினார். இளைஞர் காங்கிரஸ் தொகுதி துணைத்தலைவர் ராஜேஷ், பொதுச்செயலாளர்கள் பிரகாஷ், கார்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மாநில பொதுகுழு உறுப்பினர்கள் சாமிநாதன், முரளி, ரங்கமலை ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்.
இதில், வட்டார தலைவர்கள் சதிஷ் (வேடசந்தூர்), பாலமுருகன் (வடமதுரை), கோபால்சாமி (குஜிலியம்பாறை), எரியோடு நகர தலைவர் சண்முகம், நிர்வாகிகள் மூர்த்தி, பாண்டியன், பகவான், கண்ணன், ஜாபர்அலி உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு, கண்டன கோஷங்கள் எழுப்பினர்.