கொடைக்கானல், கீரனூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


கொடைக்கானல், கீரனூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 2 April 2023 2:15 AM IST (Updated: 2 April 2023 2:15 AM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானல், கீரனூரில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொடைக்கானலில் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் கொடைக்கானல் நகர காங்கிரஸ் கட்சி சார்பில், கொடைக்கானல் மூஞ்சிக்கல் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு கிழக்கு மாவட்ட தலைவர் அப்துல் கனிராஜா தலைமை தாங்கினார். ராகுல்காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதையும், மத்திய அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதைத்தொடர்ந்து ராகுல் காந்தியின் எம்.பி. பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை வாபஸ் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி, பிரதமர் மோடிக்கு தபால் அட்டைகளை காங்கிரஸ் கட்சியினர் அனுப்பினர்.

முன்னதாக காங்கிரஸ் கட்சியின் மேற்கு மாவட்ட துணைத்தலைவர் ஜவகர் தலைமையில் ஊழியர் கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட செயலாளர்கள் ஆசிக், பசீர்அகமது, ஜேம்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கொடைக்கானல் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த செந்தில் குமார் ராஜினாமா செய்ததையடுத்து, சையது இப்ராகிம் என்பவரை ஒருமனதாக நியமனம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கீரனூரில் ஆர்ப்பாட்டம்

இதேபோல் தொப்பம்பட்டி வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில், கீரனூர் பஸ்நிறுத்தம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு வட்டார தலைவர் சக்திபாலு தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் ஞானசேகர், மேற்கு மாவட்ட செயலாளர் டி.பழனிசாமி, துணைத்தலைவர் ஏ.பி.பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்தும், பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு ஜனநாயக விரோத போக்கை கடைபிடிப்பதாக கூறியும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்களை எழுப்பினர். இதில் கீரனூர் பேரூர் காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர்கள் முருகன், கே.பழனிசாமி, கீரனூர் பேரூராட்சி தலைவர் கருப்புசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story