தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் 2-வது நாளாக போராட்டம்


தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் 2-வது நாளாக போராட்டம்
x
தினத்தந்தி 27 April 2023 2:30 AM IST (Updated: 27 April 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் 2-வது நாளாக போராட்டம் நடத்தினர்.

தேனி

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு மே மாதம் விடுமுறை விட வேண்டும். குழந்தைகளின் வருகையை கணக்கிட்டு பிரதான மையங்களை குறு மையங்களாகவும், குறு மையங்களை பிரதான மையங்களோடு இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று முன்தினம் தொடர் காத்திருப்பு போராட்டத்தை அங்கன்வாடி ஊழியர்கள் தொடங்கினர். இரவில் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்தநிலையில் நேற்று 2-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள், கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டனர். அங்கு சாலையோரம் அமர்ந்து போராட்டத்தை தொடங்கினர். போராட்டத்துக்கு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாவட்ட தலைவர் சாந்தியம்மாள் தலைமை தாங்கினார். இதற்கிடையே அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க நிர்வாகிகளுடன், அமைச்சர் கீதாஜீவன் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போராட்டம் முடிவுக்கு வந்தது. அதன்படி மாநில மையத்தின் அறிவிப்பை தொடர்ந்து கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்தை நேற்று பிற்பகலில் அங்கன்வாடி ஊழியர்கள் கைவிட்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Related Tags :
Next Story