திருச்செங்கோட்டில் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


திருச்செங்கோட்டில்  ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
நாமக்கல்

திருச்செங்கோடு:

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர்-வீராங்கனைகளுக்கு ஆதரவு தெரிவித்தும், பாலியல் புகார் அளிக்கப்பட்ட இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், திருச்செங்கோடு அண்ணா சிலை முன்பு ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மாவட்ட தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் அன்புமணி, ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொது செயலாளர் தனசேகரன், திருச்செங்கோடு நகர செயலாளர் சுகுமார் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.


Next Story