பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் மனித சங்கிலி போராட்டம்
பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்
தஞ்சை மேரீஸ்கார்னரில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு மாவட்ட செயலாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர்கள் கிள்ளிவளவன், ராஜமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர். தனியார் நிறுவனங்களுக்கு 4 ஜி மற்றும் 5 ஜி அலைக்கற்றையை வழங்கி விட்டு அரசு பொது துறையான பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு இது வரை 4 ஜி மற்றும் 5 ஜி அலைக்கற்றைகளை வழங்காத மத்திய அரசினை கண்டித்தும், 4 ஜி, 5 ஜி அலைக்கற்றைகளை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் மாநில சிறப்பு அழைப்பாளர் லைலாபானு நன்றி கூறினார்.
Related Tags :
Next Story