சாதி சான்றிதழ் கேட்டு முற்றுகை போராட்டம்; மலைவேடன் முன்னேற்ற சங்கம் முடிவு
சாதி சான்றிதழ் கேட்டு ஆர்.டி.ஓ. அலுவலகத்தை முற்றுகை போராட்டம் நடத்த மலைவேடன் முன்னேற்ற சங்கம் முடிவு செய்துள்ளது.
தமிழ்நாடு மலைவேடன் முன்னேற்ற சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் அஜாய்கோஷ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ராமசாமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில தலைவர் டில்லிபாபு, தமிழ்நாடு மலைவேடன் முன்னேற்ற சங்க மாநில பொதுச்செயலாளர் கவுதமன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர்.
இந்த கூட்டத்தில் டில்லிபாபு பேசுகையில், பழைய வத்தலக்குண்டு பகுதியை சேர்ந்த 9 பேருக்கு 15 நாட்களில் சாதி சான்று வழங்குவதாக கடந்த நவம்பர் மாதம் கலெக்டர் முன்னிலையில் நடந்த கூட்டத்தில் ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை சான்று வழங்கவில்லை. எனவே ஆகஸ்டு 10-ந்தேதி திண்டுக்கல் ஆர்.டி.ஓ. அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும், என்றார்.