மத்திய பட்ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்


மத்திய பட்ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x

கும்பகோணத்தில் மத்திய பட்ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது

தஞ்சாவூர்

கும்பகோணம்;

மத்திய அரசு அறிவித்துள்ள பட்ஜெட்டை கண்டித்து சி.ஐ.டி.யூ . சங்கம் சார்பில் கும்பகோணத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கும்பகோணம் காந்தி பூங்கா அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜெயபால், சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் மாநில பொருளாளர் பார்த்தசாரதி, ஆட்டோ சங்கத்தின் கவுரவ தலைவர் செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டு மத்திய அரசு அறிவித்துள்ள பட்ஜெட்டை கண்டித்து கோஷம் எழுப்பினர்.


Next Story