உலகளந்த பெருமாள் கோவில் கோபுரம் முன்பு கழிப்பறை கட்ட எதிர்ப்பு


உலகளந்த பெருமாள் கோவில் கோபுரம் முன்பு கழிப்பறை கட்ட எதிர்ப்பு
x

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் கோபுரம் முன்பு கழிப்பறை கட்ட எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க. மற்றும் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலுக்கு சொந்தமான கட்ட கோபுரம் முன்பு நகராட்சி சார்பில் கழிப்பறை கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க. மற்றும் இந்து முன்னணியினர் நேற்று திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட நிர்வாகி சக்திவேல் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகி ராமராஜன், பா.ஜ.க.கள்ளக்குறிச்சி மாவட்ட பொருளாளர் ஜீவாவசந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் திருக்கோவிலூர் நகர தலைவர் எஸ்.டி.புவனேஸ்வரி, பொதுச்செயலாளர் பத்ரிநாராயணன், ராஜாஜி, ஒன்றிய தலைவர்கள் ஜே.சி.பி.முருகன், சுந்தரராஜன், நகர பொதுச்செயலாளர் திருமுருகன், மாவட்ட பொது செயலாளர் அறிவழகன், நகர துணைத் தலைவர் சதீஷ்குமார், நகர இளைஞரணி நிர்வாகி நரேஷ், வக்கீல் ஹேமா, திருக்கோவிலூர் நகர கோவில் மேம்பாட்டு நிர்வாக பிரிவு நிர்வாகி சண்முகவடிவேல், மாவட்ட நிர்வாகி ஆ.ச.ரவி, விவசாய அணி தலைவர் அய்யப்பன், மாவட்ட நிர்வாகி காந்த செல்வன், நகர நிர்வாகிகள் வாசு, முருகன் உள்படபலர் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தை

இது குறித்த தகவலின் பேரில் திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராதிகா, சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், கோபுரம் முன்பு கழிப்பறை கட்டினால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்படும். இதனால் பக்தர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே கோபுரம் முன்பு கழிப்பறை கட்டக்கூடாது என்று தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார், இது தொடர்பாக வருவாய்த்துறையினர் மூலம் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். அதனை ஏற்று பா.ஜ.க.வினர் மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story