வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி காத்திருப்பு போராட்டம்
பூதலூர் அருகே வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி காத்திருப்பு போராட்டம் நடந்தது. அப்போது 2 பேர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருக்காட்டுப்பள்ளி;
பூதலூர் அருகே வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி காத்திருப்பு போராட்டம் நடந்தது. அப்போது 2 பேர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆா்ப்பாட்டம்
தஞ்சை மாவட்டம் பூதலூர் தாலுகா வெண்டையம்பட்டிபெரிய ஏரியின் வடிகால் வாரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வாரக்கோரியும், பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரியும் கடந்த ஆண்டு டிசம்பர் 14-ந் தேதி வெள்ள நீரில் மூழ்கிய வயல்களில் இறங்கி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் கோடைக்காலத்தில் பணிகளை செய்து தருவதாக உத்தரவாதம் அளித்தனர்.
காத்திருப்பு போராட்டம்
தற்போது வெண்டையம்பட்டி பெரிய ஏரியின் வடிகால் வாய்க்கால் ரூ.24.70 லட்சம் மதிப்பில் தூர் வாரும் பணிகள் தொடங்கி உள்ளது. இந்தநிலையில் வடிகால் வாய்க்காலில் உள்ளஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு பணிகளை மேற்கொள்ளக்கோரி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் விவசாயிகள் மாவட்டக்குழு உறுப்பினர் ஜெயபால் தலைமையில் வடிகால் வாய்க்கால் அமைந்துள்ள இடத்தின் அருகில் கல்லணைகால்வாய் கரையில் கொளுத்தும் வெயிலில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இந்தநிலையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வெண்டையம்பட்டியை சேர்ந்த கலியபெருமாள், மாரிக்கண்ணு ஆகிய இருவரும் மயங்கி விழுந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அவர்கள் பூதலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த பூதலூர் தாசில்தார் பெர்சியா, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் தினேஷ்கண்ணன், உதவிப்பொறியாளர் சதீஸ், பூதலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், சப்-இன்ஸ்பெக்டர் ஜெகஜீவன், வருவாய் ஆய்வாளர் ஜெயபாரதி ஆகியோர் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.பேச்சுவார்த்தையில் 26-ந் தேதி(வெள்ளிக்கிழமை) வருவாய்த்துறை மூலமாக அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு, விவசாயிகள் மேற்பார்வையில் தூர்வாரும் பணிகளை மேற்கொள்வதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதைத்ெதாடா்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.