மகளிர் காங்கிரஸ் சார்பில் கியாஸ் சிலிண்டருக்கு பாடை கட்டி போராட்டம்
பேரணாம்பட்டில் மகளிர் காங்கிரஸ் சார்பில் கியாஸ் சிலிண்டருக்கு பாடை கட்டி போராட்டம் நடந்தது.
பேரணாம்பட்டு
பேரணாம்பட்டில் கியாஸ் சிலிண்டர் விலையை உயர்த்தி வரும் மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து வேலூர் மாவட்ட மகளிர் காங்கிரஸ் சார்பில் சிலிண்டருக்கு பாடை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவர் கோமதி குமரேசன் தலைமை தாங்கினார். வளர்மதி, மைதிலி, ருக்மணிதேவி, லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணாம்பட்டு நகர காங்கிரஸ் கமிட்டி முஜம்மில் அஹம்மத் வரவேற்றார்.
வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் தலைவர் சுரேஷ்குமார் கலந்து கொண்டு போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
இதில் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் கிருஷ்ணவேணி, ஒன்றிய காங்கிரஸ் தலைவர்கள் சங்கர், வீராங்கன், பெரியசாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் விஜய்பாபு, மாவட்ட நிர்வாகிகள் சக்கரவர்த்தி, பாஸ்கரன், உவைஸ் அஹமத், யுவராஜ்,
பிற அணி மாவட்ட நிர்வாகிகள் காளியப்பன், தினேஷ், மாநில ராகுல் விளையாட்டு அமைப்பு தலைவர் ஆனந்தவேல் மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள் ராகுல், ஜலந்தர், ஆனந்தராஜ், ரஜினிகாந்த், முசாகீர், அஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொது செயலாளர் மகாலட்சுமி நன்றி கூறினார்
இதையடுத்து பேரணாம்பட்டில் நான்கு கம்பம் பகுதியில் தொடங்கி கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து பாடை கட்டி ஊர்வலமாக எடுத்து சென்று சுடுகாட்டில் புதைக்கும் போராட்டம் நெடுஞ்சாலை வழியாக பஸ் நிலையத்தை அடைந்தது.
அப்போது பேரணாம்பட்டு போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.