அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் கஞ்சி காய்ச்சும் போராட்டம்


அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் கஞ்சி காய்ச்சும் போராட்டம்
x

காட்டுப்புதூர், கடுக்கரை வழியாக இயங்கிய அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.

கன்னியாகுமரி

அழகியபாண்டியபுரம்:

காட்டுப்புதூர், கடுக்கரை வழியாக இயங்கிய அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.

அரசு பஸ்கள் நிறுத்தம்

காட்டுப்புதூர், கடுக்கரை, திடல் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு சென்று கொண்டிருந்த அரசு பஸ்கள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நிறுத்தப்பட்டது. இதனால் தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாமலும், பொதுமக்கள் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல முடியாமலும், அவதிப்பட்டனர்.

அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டதைக் கண்டித்தும், கடைமடை பகுதிகளுக்கு கால்வாயில் தண்ணீர் செல்லாததை கண்டித்தும் காட்டுப்புதூர், கடுக்கரை, திடல் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் கடுக்கரை பஸ் நிறுத்தம் அருகே கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்தினர்.

தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ.

இதில் முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

போராட்டத்தில் மாநில எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் கிருஷ்ணதாஸ், மாநில எம்.ஜி.ஆர். இளைஞரணி இணைச் செயலாளர் சிவ செல்வராஜன், மாநில வக்கீல் பிரிவு இணைச் செயலாளர் பரமேஸ்வரன், கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. அவைத்தலைவர் சேவியர் மனோகரன், தோவாளை ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் சாந்தினி பகவதியப்பன், மாவட்ட துணைச் செயலாளர் பார்வதி, தோவாளை வடக்கு ஒன்றிய செயலாளர் பொன்.சுந்தர்நாத், கடுக்கரை ஊராட்சி தலைவர் கமலாமகராஜன், திடல் ஊராட்சி தலைவர் ராஜலெட்சுமி ராமசாமி, காட்டுப்புதூர் ஊராட்சி தலைவர் கிறிஸ்டிபாய் சின்னகுமார், தோவாளை வடக்கு ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் அய்யப்பன், ஒன்றிய கவுன்சிலர்கள், ஜாய் அம்மாள், ஏசுதாஸ், அழகியபாண்டியபுரம் பேரூர் செயலாளர் பெருமாள், பூதப்பாண்டி பேரூர் செயலாளர் எபிஜாண்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் அய்யப்பன், கோட்ட மேலாளர் சுனில் குமார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. கூறும் போது, 'அரசு பஸ்களை இந்த பகுதி மக்கள் எப்படி பயன்படுத்து கிறார்களோ அதற்கு இடையூறு ஏற்படாத வகையில் தொடர்ந்து இயக்க வேண்டும்' எனக் கூறினார். இதனைத் தொடர்ந்து போக்குவரத்து கழக அதிகாரிகள் 'இந்த பகுதிகளுக்கு அரசு பஸ்கள் தொடர்ந்து இயக்கப்படும்' என உறுதி அளித்தனர். இதனையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது. மேலும் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. கூறும் போது, 'குமரியில் கடைமடைகளுக்கு தண்ணீர் கிடைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story