சீமான் உருவபொம்மை எரித்து போராட்டம்


சீமான் உருவபொம்மை எரித்து போராட்டம்
x
தினத்தந்தி 20 Feb 2023 12:30 AM IST (Updated: 20 Feb 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

பழனியில் சீமான் உருவபொம்மை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட 12 பேரை கைது செய்தனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மேற்கு மாவட்ட தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில், பழனி பஸ்நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு கட்சியின் இளம்புலிகள் அமைப்பு மாவட்ட செயலாளர் இரணியன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின்போது, ஒரு சமுதாயத்தை சீமான் அவதூறாக பேசியதாக கூறியும், சீமானை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என கோரி கோஷங்கள் எழுப்பினர்.

பின்னர் திடீரென்று சீமானின் உருவபொம்மையை அவர்கள் தீ வைத்து எரித்தனர். மேலும் சாலையின் நடுவில் நின்றபடி கோஷம் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு சிவசக்தி, இன்ஸ்பெக்டர் உதயக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் போலீசார் உருவபொம்மையில் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்ப்புலிகள் கட்சி, திராவிடர் விடுதலை கழக நிர்வாகிகள் என 12 பேரை கைது செய்தனர். அவர்கள் பழனியில் உள்ள திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். பின்னர் மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.


Related Tags :
Next Story