திருச்செந்தூரில்வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்


திருச்செந்தூரில்வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்
x
தினத்தந்தி 26 Jan 2023 12:15 AM IST (Updated: 26 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் பகுதி வீடுகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் நகராட்சியில் உள்ள அம்பேத்கர் நினைவு பூங்காவில் அம்பேத்கருக்கு சிலை அமைக்கக்கோரி தலித் மக்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் திருச்செந்தூர் நகராட்சி நிர்வாகம் சார்பில் அம்பேத்கருக்கு சிலை அமைக்க தீர்மானம் நிறைவேற்றக்கோரி கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் இன்று குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், அம்பேத்கர் நினைவு பூங்காவில் அம்பேத்கருக்கு சிலை அமைக்க தீர்மானம் நிறைவேற்றாத திருச்செந்தூர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நேற்று திருச்செந்தூர் பகுதிக்குட்பட்ட தோப்பூர், கரம்பவிளை, நா.முத்தையாபுரம், நாலுமூலைகிணறு மற்றும் பிரசாத் நகர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தலித் மக்கள் தங்களது வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story