விழுப்புரத்தில்இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


விழுப்புரத்தில்இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 30 April 2023 12:15 AM IST (Updated: 30 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விழுப்புரம்


விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் தமிழ் மாநில தலைவர் அரவிந்தசாமியை தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் கவர்னர் பாதுகாப்பு என்ற பெயரில் பட்டம் பெற விடாமல் ஒரு நாள் முழுவதும் காவல்துறை கைது செய்ததோடு, மனித உரிமை மீறல் செய்த தஞ்சாவூர் காவல்துறையை கண்டித்தும் மற்றும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்குழு பாடத்திட்ட மாற்றத்தின் மூலம் வரலாற்றை மாற்றி எழுதும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிராகவும் நடைபெற்றது.

இதற்கு மாவட்ட துணைத்தலைவர் சுமித்ரா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அரிகிருஷ்ணன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் விழுப்புரம் மாவட்ட தலைவர் பிரகாஷ், மாநில துணை செயலாளர் தமிழ்பாரதி ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் மாவட்ட துணைத்தலைவர் ஹரீஷ்குமார், மாவட்டக்குழு உறுப்பினர் மதுமிதா உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story