பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்
பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
திருச்சி
திருவெறும்பூர் அருகே கைலாசபுரத்தில் பாய்லர் ஆலை வளாகத்தில் சி.பி.எஸ்.இ.யாக தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப்பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் அடிப்படை வசதிகள் இல்லை எனக்கூறி நேற்று பாய்லர் ஆலை அனைத்து சங்கங்களின் சார்பில் பள்ளியின் நுழைவு வாயில் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதற்கு தொ.மு.ச. தொழிற்சங்க தலைவர் கணேஷ்குமார் தலைமை தாங்கினார். அப்போது செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை பாய்லர் ஆலை பாதுகாவலர்கள் உள்ளே அனுமதிக்காததால் இரு தரப்பினரிடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story