ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர்
தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் வேலூர் வட்டம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது.
சங்க வட்டத்தலைவர் கணபதி ராஜா தலைமை தாங்கினார். இணைச்செயலாளர் பாலகிருஷ்ணன், துணைத்தலைவர்கள் லட்சுமணன், நித்தியானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க செயலாளர் சாமிநாதன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் ஓய்வுப்பெற்ற அனைத்துத்துறை அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும்.
புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.
முடிவில் சங்க பொருளாளர் நெடுமால் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story