பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் ஆர்ப்பாட்டம்


பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

ஆர்ப்பாட்டம்

நாடு முழுவதும் 15 மாநிலங்களில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகங்களில் நேற்று முன்தினம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் 45 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து மாநிலங்களிலும் போராட்டம் நடத்தப்பட்டது. அதன்படி திண்டுக்கல் மாவட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. அதை கண்டித்து நேற்று முன்தினம் முற்றுகை, சாலை மறியல் போராட்டம் ஆகியவை நடத்தப்பட்டன.

இதைத் தொடர்ந்து நேற்று பேகம்பூரில் பாப்புலர் பிரண்ட் இந்தியா அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு நகர தலைவர் முகமது இலியாஸ் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட தலைவர் மில்லத் அன்வர் உள்ளிட்ட நிர்வாகிகள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். அப்போது என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய சோதனையை கண்டித்தும், என்.ஐ.ஏ. கைது செய்த 45 பேரை விடுவிக்கக்கோரியும் வலியுறுத்தியும் கோஷமிட்டனர்.

நிர்வாகிகள் கைது

இதேபோல் வத்தலக்குண்டுவில், எஸ்.டி.பி.ஐ., பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் வத்தலக்குண்டு ஜமாத்தார்கள் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தொகுதி செயலாளர் அரசு மைதீன், நகர பொருளாளர் அகமது பிலால், எஸ்.டி.டி.யு. மாநில செயற்குழு உறுப்பினர் வீரர் அப்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

பழனியில் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகளை கைது செய்ததை கண்டித்து பழனி பஸ் நிலையம் மயில் ரவுண்டானா அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நகர தலைவர் பாரிஸ் அகமது தலைமை தாங்கினார். எஸ்.டி.பி. மாவட்ட தலைவர் கைசர் அலி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகளை கைது செய்ததை கண்டித்து கோஷமிட்டனர்.


Next Story