வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டம்


வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டம்
x

அரசு கள்ளர் பள்ளிகள் இணைப்பு விவகாரம் தொடர்பாக, வீடுகளில் கருப்புக்கொடி கட்டி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

திண்டுக்கல்

தமிழகத்தில் உள்ள அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை, பள்ளிக்கல்வித்துறையோடு இணைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு பிரமலை கள்ளர் சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நிலக்கோட்டை தாலுகாவுக்குட்பட்ட பகுதியில், பிரமலை கள்ளர் சமூகத்தினர் தங்களது வீடுகளில் கருப்புக்கொடி கட்டி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

அதன்படி கொக்குபிள்ளை பட்டி, ராமராஜபுரம், அணைப்பட்டி, எம். குரும்பபட்டி, என்.ஊத்துப்பட்டி, சிலுக்குவார்பட்டி, சென்னஞ்செட்டிபட்டி, ஜி.தும்மலப்பட்டி, கெங்குவார்பட்டி, குளத்துப்பட்டி, என்.கோவில்பட்டி, தெப்பத்துப்பட்டி, குன்னத்துப்பட்டி, தருமத்துப்பட்டி, விராலிமலையன்பட்டி, விருவீடு, தாதபட்டி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கிற மக்கள் தங்களது வீடுகளில் கருப்புக்கொடிகளை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story