ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினா்
விருதுநகர்
விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க விருதுநகர் மாவட்டகிழக்கு மற்றும் மேற்கு கிளைகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிழக்கு மாவட்ட தலைவர் உலகநாதன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை மாவட்ட துணைத்தலைவர் முருகேசன் தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் செல்வின் கோரிக்கைகள் குறித்து விளக்க உரையாற்றினார் பல்வேறு அரசு ஊழியர் சங்கங்களின் நிர்வாகிகள் வாழ்த்தி பேசினர். விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் சுவிசேஷமுத்து நிறைவுறையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது புதிய ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்ய வேண்டும் அகவிலைப்படி உயர்வு காலம் கடந்து வழங்குவதை தவிர்க்க வேண்டும். ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் மஸ்டரிங் முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், ஓய்வூதியம், பணிக்கொடை வழங்குவதுடன் ஓய்வூதியத்தை ரூ.7850 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. முடிவில் மாவட்ட செயலாளர் பிச்சை நன்றி கூறினார்.