போராட்ட வழக்கு விசாரணை:அருள் எம்.எல்.ஏ. உள்பட 45 பேர் கோர்ட்டில் ஆஜர்
போராட்ட வழக்கு விசாரணைக்காக அருள் எம்.எல்.ஏ. உள்பட 45 பேர் கோர்ட்டில் ஆஜரானார்கள்.
சேலம்
சேலம்,
2013-ம் ஆண்டு மரக்காணத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்தையொட்டி பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து சேலம் புதிய பஸ் நிலையம் அருகே பாட்டாளி மக்கள் கட்சியினர் மறியல் போராட்டம் நடத்தினர். இதையடுத்து பள்ளப்பட்டி போலீசார் 45 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இதனிடையே வழக்கு விசாரணைக்காக நேற்று அருள் எம்.எல்.ஏ. உள்பட பா.ம.க. நிர்வாகிகள் 45 பேர் கோர்ட்டில் ஆஜராகினர்.
Related Tags :
Next Story