த.மா.கா.வினர் கையெழுத்து இயக்க போராட்டம்


த.மா.கா.வினர் கையெழுத்து இயக்க போராட்டம்
x
தினத்தந்தி 27 May 2023 12:30 AM IST (Updated: 27 May 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

பழனியில் தமிழக அரசை கண்டித்து தா.மா.கா.வினர் கையெழுத்து இயக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மேற்கு மாவட்ட த.மா.கா. இளைஞரணி சார்பில், கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்து பழனியில் கையெழுத்து இயக்க போராட்டம் நடைபெற்றது. இதற்கு இளைஞரணி மாவட்ட தலைவர் சுந்தரபாண்டியன் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகி மணிக்கண்ணன் முன்னிலை வகித்தார். வேடசந்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. தண்டபாணி தொடங்கி வைத்தார். பின்னர் த.மா.கா.வினர், பொதுமக்கள் என பலரும் கையெழுத்து இட்டனர்.

அப்போது கட்சியினர் கூறுகையில், கள்ளச்சாராயத்தை தடுக்க தவறியது, பொழுதுபோக்கு கூடங்களில் மது விற்பனைக்கு அனுமதி என்பது மிகவும் தவறானது. எனவே இதற்கு எதிராக சுமார் 1 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கி மாவட்ட கலெக்டரிடம் வழங்க உள்ளோம் என்றனர்.


Related Tags :
Next Story